
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போது தான் மெதுவாக புள்ளிகளில் மெதுவாக முன்னேறி வருகிறது.
மேலும் வேகமாக முன்னேறி கோப்பையை கைப்பற்ற அணியில் சில மாற்றங்கள் செய்யப் படப் போவதாகவும் சச்சினை அணியில் சேர்த்தப் போவதாகவும் வந்த செய்தியை படித்ததும்
எனக்கு உற்சாகம் தாங்கவில்லை.
ஏனென்றால் நான் சச்சினின் தீவிர விசிறி. மேலும் சென்னை சூப்பரின் அனுதாபி.
சச்சினுடன் சேர்த்து அணியில் மேலும் சில மாற்றங்கள் செய்யப் படப் போவதாகவும் அதன் படி சச்சின் மற்றும் ஜெயசூர்யாவா ஓபனிங் செய்வதாகவும் எழுதியிருந்தார்கள்.
முதல் டவுன் ஹெய்டனாம்.
மற்ற வீரர்களின் விபரத்தை பின் வருமாறு போட்டிருந்தார்கள்.
சுரேஷ் ரெய்னா
கில் கிறிஸ்ட் (விக்கெட் கீப்பர்)
யூசுஃ பதான்
கிப்ஸ்
தில்ஷான்
யூசுப் அப்துல்லா (பந்து வீச்சு)
ஆர்.பி.சிங் (பந்து வீச்சு)
மாலிங்கா (பந்து வீச்சு)
சூப்பர்!!
கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் கலக்கி விடுவார்கள் என்று தான் தோன்றியது.
சென்னைக்காக டெண்டுல்கர் சுளீர் சுளீரென அடிக்கப் போகும் சிக்ஸர்களை எண்ணி நான் மகிழ்ந்து கொண்டிருந்த போது என் மீதும் சுளீரென ஏதோ அடித்தது.
ஜன்னல் வழியாக வெயில்!
'ம்ஹூம்..விடிஞ்சிருச்சா..?' பாயை சுருட்டி மடக்கி வைத்து விட்டு வேப்பங்குச்சியை ஒடித்து பல் துலக்கியவாறு ஆற்றங்கரைக்கு போக தயாரானேன்.
(ஓஹோ இது தான் கனவு அணியா..? பின்னூட்டத்தில் உங்கள் கனவு அணியை எழுத மறக்க வேண்டாம்)