Monday, September 21, 2009

பிரெஞ்சுப் படத்தில் ரஜினி!

யூ டியூப்பில் தான் காண நேர்ந்தது இந்த காணொளியை. பிரெஞ்சுப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காட்சிகள்!!

பார்த்து விட்டு அப்படியே தமிழிஷில் சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் ஒரு ஓட்டு போட்டு விட்டு செல்லுங்கள்!

Sunday, August 2, 2009

முற்றுப்புள்ளி இல்லாத ஒரு முழுக் கதை!

எனன தான் பூபதி பஞ்சர் போடுவதிலும் சைக்கிள் பழுது பார்ப்பதிலும் கில்லாடி என பெயர் வாங்கியிருந்தாலும், பணம் பண்ணுவதற்காக செய்ய வேண்டிய சில தகிடுதத்தங்களை தான் மட்டுமில்லாமல் தன் சிஷ்யனுக்கும் நன்றாகவே சொல்லிக் கொடுத்திருந்ததால் தான் "டேய் பாண்டி, இன்னிக்கு ரோட்டுல செய்ய வேண்டிய காரியத்தை முடிச்சிட்டீயாடா.." என்று கேட்பதற்கு முன்பே "அண்ணேய்...இன்னிக்கு ரோடு முளுக்க கண்ணாடி சில்லு, ஆணி நெறய்ய போட்டிருக்கேன்..பஞ்சர் போட எத்தனை வண்டி வருதுன்னு பாருங்க.." என்று பாண்டி சொல்ல சொல்ல ஒரு வயதானவர் வியர்வையுடன் சைக்கிளை தள்ளிக் கொண்டு கடைக்கு வந்து எட்டிப் பார்த்து, " பஞ்சர் போடணுங்க.." என்று பூபதியை பார்த்து கேட்க, மகிழ்ச்சியடைந்த பூபதி, 'பரவாயில்ல பொடியன்..நல்லாவே வேலை செஞ்சிருக்கான்..உடனே ஒர்க அவுட் ஆயிருச்சி..இந்த வாரம் பையனுக்கு சினிமாவுக்கு போக காசு குடுத்திரலாம்..ரொம்ப நாளாவே கேட்டுட்டு இருக்கான்..' என்று எண்ணியவாறு பாண்டியை பார்க்க அவன் வெற்றிப் புன்னகையுடன் பூபதியை பார்த்து சிரிக்கும் போது, திடீரென 'முன் தினம் பார்த்தேனே' என்று பூபதியின் மொபைல் அலறுவதை கேட்டவன், " டேய் பாண்டி போன்ல யாருன்னு கேளு.." என்று சொல்லிவிட்டு "முன்னால டயருங்களா..? ரொம்ப தேஞ்ச்சிருக்கே? டயரை மாத்திரலாங்களா..? என்று பெரியவரிடம் சென்றவன், "அண்ணேய்..உங்களுக்கு தான் போனு..அக்கா பேசுது.." என்று சொன்ன பாண்டியிடமிருந்து போனை வாங்கி " சொல்லு செல்வி.." என்றவனுக்கு எதிர் முனையில் பேசிய தன் மனைவி "ஏங்க நான் பையனை இஸ்கூலுக்கு கூட்டிட்டு போயிட்டு இருந்தேன்..எந்த படு பாவியோ ரோட்டுல ஆணி போட்டு வச்சிருக்கான்..காலுல ஏறி ரத்தம் கொட்டுது..உடனே வாங்க, நான் கறிக்கடை மொக்குல இருந்து பேசுரேன்.." என்று சொன்னதை கேட்டு முகம் பேயறந்ததை போல் ஆகி ஒன்றும் பேசாமல் அவசர அவசரமாக சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒடும் போது 'கடவுளே நான் போடச் சொன்ன ஆணியில இப்ப என்னோட சைக்கிளே பஞ்சர் ஆயிறக் கூடாது..எனக்குன்னு ஒரு பிரச்சனை வரும் போது தான் அடுத்தவங்க வலி தெரியுது..இனிமே இப்படி பண்றதை விட்டுரேன்..' என்று மனதில் வேண்டிக் கொண்டான் பூபதி.

(குறிப்பு: முடிவில் ஒரு முற்றுப் புள்ளி வைக்க அனுமதித்ததற்கு மிக்க நன்றி)

Sunday, May 3, 2009

சென்னை சூப்பர் கிங்ஸில் டெண்டுல்கர்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போது தான் மெதுவாக புள்ளிகளில் மெதுவாக முன்னேறி வருகிறது. 

மேலும் வேகமாக முன்னேறி கோப்பையை கைப்பற்ற அணியில் சில மாற்றங்கள் செய்யப் படப் போவதாகவும் சச்சினை அணியில் சேர்த்தப் போவதாகவும் வந்த செய்தியை படித்ததும்
எனக்கு உற்சாகம் தாங்கவில்லை.

ஏனென்றால் நான் சச்சினின் தீவிர விசிறி. மேலும் சென்னை சூப்பரின் அனுதாபி.

சச்சினுடன் சேர்த்து அணியில் மேலும் சில மாற்றங்கள் செய்யப் படப் போவதாகவும் அதன் படி சச்சின் மற்றும் ஜெயசூர்யாவா ஓபனிங் செய்வதாகவும் எழுதியிருந்தார்கள்.

முதல் டவுன் ஹெய்டனாம்.

மற்ற வீரர்களின் விபரத்தை பின் வருமாறு போட்டிருந்தார்கள்.

சுரேஷ் ரெய்னா 

கில் கிறிஸ்ட் (விக்கெட் கீப்பர்)

யூசுஃ பதான்

கிப்ஸ்

தில்ஷான்

யூசுப் அப்துல்லா (பந்து வீச்சு)

ஆர்.பி.சிங் (பந்து வீச்சு)

மாலிங்கா (பந்து வீச்சு)

சூப்பர்!!

கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் கலக்கி விடுவார்கள் என்று தான் தோன்றியது.

சென்னைக்காக டெண்டுல்கர் சுளீர் சுளீரென அடிக்கப் போகும் சிக்ஸர்களை எண்ணி நான் மகிழ்ந்து கொண்டிருந்த போது என் மீதும் சுளீரென ஏதோ அடித்தது.

ஜன்னல் வழியாக வெயில்!

'ம்ஹூம்..விடிஞ்சிருச்சா..?' பாயை சுருட்டி மடக்கி வைத்து விட்டு வேப்பங்குச்சியை ஒடித்து பல் துலக்கியவாறு ஆற்றங்கரைக்கு போக தயாரானேன்.

(ஓஹோ இது தான் கனவு அணியா..? பின்னூட்டத்தில் உங்கள் கனவு அணியை எழுத மறக்க வேண்டாம்)

Friday, April 17, 2009

இட்லி கடை இன்றைய ஸ்பெஷல்: சிக்ஸர் இட்லிகள்!!!

1. சென்ற 20-20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 6 பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்து யுவராஜ் சிங் பின்னி பெடலெடுத்தது அனைவரும் அறிந்ததே. நாளை 20-20 போட்டிகள் ஆரம்பிக்கும் நிலையில் அதை நினைவு கூர்கிறார்
இட்லிக் கடை சட்னி மாஸ்டர்.

2. ஜெயசூர்யா நியூசிலாந்துடன் அடித்த நான்கு ஆறுகள்! விரும்பிக் கேட்ட நேயர்: பக்கத்து டீக் கடை நாயர்.

3. ஷேவக் அடிச்சா சிக்ஸர் தாண்டா..! : இமாலய சிக்ஸர்.

4. அஃபிரிடி ஹர்பஜன் பந்தில் அடித்த நான்கு சிக்ஸர்.

5. தானை தலைவர் கபில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த தொடர்ச்சியான 4 சிக்ஸர்கள்!! 















Thursday, April 16, 2009

Wednesday, April 15, 2009




http://mukkonam.blogspot.com/

நல்ல தரமான பதிவு.
பதிவர் அடிக்கடி தூங்கி விடுவார் போல. குறைவான பதிவுகளே காணப்படுகிறது.
பதிவுகளில் நகைச்சுவை தெரிகிறது.

பிடித்த பதிவுகள்:

1) சுய முன்னேற்ற பதிவுகள்: 
http://mukkonam.blogspot.com/2009/03/blog-post.html
http://mukkonam.blogspot.com/2009/03/2.html
http://mukkonam.blogspot.com/2009/02/blog-post_24.html

2) கிரிக்கெட் சிறுகதை:
http://mukkonam.blogspot.com/2009/01/2039.html

3) வெண்ணிலா கபடி குழு விமர்சனம்: http://mukkonam.blogspot.com/2009/04/blog-post.html



சுவையான முறையில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கிறார். வாழ்த்துக்கள்!

பிடித்த பதிவுகள்:

1) கிரிக்கெட் பற்றி: http://enthamizh.blogspot.com/2009/04/blog-post_15.html

2) புதிய பத்து ரூபாய் நாணயம்: http://enthamizh.blogspot.com/2009/04/blog-post_5629.html

3) கூகுள் பற்றி : http://enthamizh.blogspot.com/search/label/கூகிள்

4) விளையாட்டு: http://enthamizh.blogspot.com/2009/04/blog-post_13.html