Monday, January 25, 2010

ஆயிரத்தில் ஒருவன் - ஒரு புதிய ஆரம்பம்!



உன்னைப் போல் ஒருவன் படத்தைப் பற்றி எதுவும் எழுதாதற்கே என்னை ஆயிரத்தில் ஒருவனைப் போல் பார்த்தார்கள். இந்த நிலைமையில் ஆயிரத்தில் ஒருவனைப் பற்றி எதுவும் எழுதாவிடில் என்னை  'அவதார்' ரேஞ்சில் பார்க்கக் கூடும் என்பதால் நானும் பதிவுலகத்துடன் சேர்ந்து ஆயிரத்தில் ஒருவனைப் பற்றி ஒரு சில கும்மிகளை மட்டும் அடிக்கலாம் என முடிவு செய்தேன்.

எந்த வித காம்ப்ரமைஸ்ஸும் பண்ண மாட்டேன், மனதில் தோன்றியதை அப்படியே கொடுப்பேன், தமிழிலும் ஹாலிவுட் பிரம்மாண்டம் படைக்க முடியும் என்ற செல்வாவின் தைரியத்தை பாராட்ட வேண்டும்.

பார்வையாளனுக்கு ஸ்பூன் ஃபீடிங் செயய வேண்டியதில்லை. - கோடு போட்டாலே புரிந்து கொள்வான் என்று நமது மேல் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறார் செல்வா.



இது போன்ற கனவுலக டைப் கதைகளுக்கு லாஜிக் தேவையில்லை தான். ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஆனால் யதார்த்மான காட்சிகளுடன் (கார்த்தி தனது ஆட்களை வேலை வாங்குவது, பயணத்துக்கு கிளம்பும் முன் சிறிய கூட்டத்தில் பேசுவது, ஆன்ட்ரியா மற்றும் ரீமா சண்டை போடுவது), கனவுலக டைப் காட்சிகளை இணைத்த விகிதம் தான் பொருந்தவில்லை. உதாரணத்துக்கு யதார்த்தமாக சென்று கொண்டிருக்கும் காட்சியமைப்பில் திடீரென கிராபிக்ஸ் நெருப்பு மீன்கள் துரத்தும் 'ஆரம்ப தடை' காட்சியினை சொல்லாம்.

லாஜிக் தேவைல்லாத அதீத கற்பனை காட்சிகளாகவே படத்தை முழுவதும் நகர்த்தியிருந்தால் இன்னும் சுவாரசியமாக படத்தினுள் அமிழ்ந்திருப்போம்.

படத்துடன் ஒன்ற வேண்டிய சுவாரசியத்தை குறைத்ததற்கு இதுவும், அடுத்த காட்சியைப் பற்றிய எதிர்பார்ப்பின்மையும் தான் காரணங்கள். - தனித்தனி காட்சிகளாக பார்க்கும் போது பாராட்டப் பட வேண்டியவைகளாக இருக்கும் காட்சிகள் முழுப்படமாக பார்வையாளனுக்கு வழங்கப்படும் போது
பார்வையாளன் படத்தின் ஓட்டத்தில் ஒன்ற வேணட்டும்.

யாதார்த்தமும் கனவுலக கதையும் கலக்கப் பட்ட கலவை விகிதம் தான் படத்தின் சிறு குறைக்கு காரணம். படைப்பாளிக்கு அதன் குறைகள், தன் படத்தை தானே பார்த்தாலும் தெரியாது.

கார்த்தி, ரீமா, பார்த்தீபன், ஆன்ட்ரியா என அனைவரும் மிக அற்புதமாக நடித்துள்ளனர். பார்த்தீபன் வித்தியாச வேடத்தில் ஆச்சரியம் தந்துள்ளார்.



''உன் மேல ஆசை தான்' மற்றும் 'அதோ அந்த பறவை' பாடலையும், காட்சியமைப்பையும் மக்கள் ரசித்துப் பார்த்தனர்.

காமிரா புகுந்து விளையாடி உள்ளது.

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் நன்றாகவே வந்துள்ளன. தனது கற்பனையை அப்படியே திரையில் வடித்துள்ளார் செல்வா.

தமிழில் பாராட்டப் பட வேண்டிய ஒரு புது முயற்சி. வரும் நாட்களில் இதனை தொடர்ந்து இது போன்ற புது முயற்சிகளுக்கு இது ஒரு அடித்தளமாக இருக்கும்.

இன்னும் யாதார்த்தம் + கனவுலக பாணி கதையினை சரியான விகிதத்தில் கலந்து என்னைப் போன்ற சிற்றறிவினர் புரிந்து கொள்ளும் வகையில் திரைக்கதையில் சுவாரசியத்தை சேர்த்திருந்தால ஆங்கிலப் படங்களை தூக்கி சாப்பிட்டிருக்கும்.

கண்டிப்பாக செல்வா சீக்கிரமே செய்வார். ஒரு சிறிய tuning மட்டுமே வேண்டும். அதற்கான முழு திறமையும் வாய்த்தவர் செல்வா.

1 comment:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete